செயலாளரின் செய்தி



98.8 சதுர கி.மீ அளவைக் கொண்ட மஹர பிரதேச சபை ஆளுகை பிரதேசத்தில் மக்களின் சுகாதார சேவைகள், பொதுப் பாதைகளுக்கு ஒளியை கொண்டுவரல், சமூக அபிவிருத்தி, பொது பயன்பாட்டு சேவைகள் ஆகியவற்றை பொது மக்களி;ன் பங்கேற்றலுடன் முன்னெடுத்து சுற்றுச்சூழல் சினேகபூர்வமாக இருக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட கட்டளைகள் மற்றும் ஒழுங்குவிதிகளுக்கு இணங்க செயற்படுத்தி வரையறுக்கப்பட்ட வளங்களின் உச்ச பயனைப்பெற்று மக்களி;ன் நலனுக்காக வருடாந்த வரியை செலுத்தும் மக்களுக்கு இ;ந்த சபையானது பாரிய சேவையை ஆற்றுகிறது. நான்கு தீங்குகளை இல்லாதொழித்த மஹாராதனின் புன்னிய கால்களால் சுத்திகரிக்கப்பட்ட சோலையாக பிலிகுத்துவை மஹர பிரதேசத்தில் ஒரு வரலாற்று யாத்திரை என்று அழைக்கலாம். 200 ஏக்கர் நிலப்பரப்பில் துளித்துளியான மற்றும் துளியி;ல்லா கற்கலால் உருவாக்கப்பட்ட பிலிகுத்து ராஜ மஹ விஹாரையை அடிப்படையாக வைத்து அபிவிருத்தி அடைந்த தொல்பொருள் பாரம்பரியம் நிறைந்த ஒரு வரலாற்று வனப்பகுதியாகும். அதனால் தான் இது மேல் மாகாணத்தில் அமைந்துள்ள பாரிய குவாரி வளாகமாக வரலாற்று முக்கியத்துவம் பெறுகின்றது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சில இடங்களாக வலகம்பா விஹாரை, மாளிகாதென்ன ஓய்வறை, வேபட புரான ரஜமஹ விஹாரய, அனகாரிக மஹமெவ்னா அசபுவ, வரபாலன வெம்பிட சிலை ஆகியவ்றறையும் பார்வையிடலாம். தனவுகன்த ஒரு பிரசித்திபெற்ற தியான மத்திய நிலையமாகும். இசிகலிகன்தை இயற்கை எழில் கொஞ்சும் மலை உச்சியி;ல் அமைந்துள்ளது. இதில் யோகாஸ்வரமும் உள்ளடங்குகிறது. ... அதிவேகமாக அபிவிருத்தி அடைந்துவரும் மஹர பிரதேச சபை எல்லைகளுக்கு உட்பட்ட பிரதேச மக்களின் பொது வசதிகளை மேம்படுத்தி அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்துவதே எனது பிரதான நோக்கமாகும். அப்பகுதி மக்களின் தேவைகளைக் கண்டறிந்து பொது மக்கள் சார்பில் தொடர்ந்தும் பணி;யாற்றுவேன் மஹர பிரதேச சபைக்கு கிடைக்கும் வளங்களை பாதுகாத்து அவற்றை திறம்பட பயன்படுத்துவதன் ஊடாக வெளிப்படைத்தன்மையை உருவாக்கி அப்பகுதி மக்களுக்கு வினைத்திறன்மிக்க பயனுறுதிமிக்க சேவையை வழங்க நான் எதிர்பார்க்pறேன். மஹர பிரதேச சபையை தொடர்ச்சியாக அபிவிருத்தி;யை நோக்கி வழிநடத்தும் பணியை முன்னெடுப்பத்றகு நான் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதுடன் அத்தகைய செயற்பாடு;களை அடைவதற்கு உங்கள் அனைவரிதும் ஒத்துழைப்பும் குறைவில்லாமல் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன் மஹர பிரதேச சபையை உள்ளூராட்சி மன்றங்களுக்கிடையில் அதிசிறந்த மக்கள் தொடர்பைப் பேணும் மற்றும் வினைத்திறன்மிக்க சேவையை வழங்கும் நிறுவனமாக உருவாக்குவதே எனது முதன்மையான நோக்கமாகும். மஹர பிரதேச மக்களையும் மற்றும் எம்முடன் இணைந்து செயற்பட விரும்பும் நிறுவனங்கள் மற்றும் பிரசைகளையும் மஹர பிரதேச சபையின் இணையத்தளத்தி;றகு வருகை தருமாறு நான் மிகவும் கௌரவத்துடன் அழைப்பு விடுக்கிறேன்.

எல்.ஏ. மஞ்சுளா சமன்தி,
செயலாளரும் பிரதேச சபையின் அதிகாரங்கள்,
பணிகளை அமுலாக்கும் அதிகாரியும்
மஹர பிரதேச சபை.
2024-01-02