சபையின் வரலாறு

மஹர சபையின் ஆளுகை;கு உட்பட்ட எல்லைகளானது மேற்கில் ஜாஎலை, வத்தளை, மற்றும் களனி பிரதேச சபை பிரிவுகள், கிழக்கில் அத்தனகல்லை மற்றும் தொம்பே பிரதேச செயலாளர் பிரிவுகள், வடக்கில் கம்பஹ பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் தெற்கி;ல் பியகம செயலாளர் பிரிவு ஆகியவற்றால் சூழப்பட்ட எல்லைகளை கொண்டுளளன. 98.3 சதுர கி.மீ விஸ்தீரனமுள்ள இப்பிரிவானது 92 கிராம சேவகர் பிரிவுகளை கொண்டுள்ளது. இப்பிரிவின் மொத்த சனத்தொகையானது 216763 ஆகும். இந்தப் பிரதேசத்தில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் அதே வேளையி;ல் கணிசமான தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் பறங்கியர்களும் வாழ்கின்றனர்.

இந்தப் பிரிவின் பிரதான பொரளாதாரப் உற்பத்திப் பயிர்களாக நெல், தென்னை மற்றும் இறப்பர் காண்படுவதுடன் நெல் உற்பத்தியானது 1298 ஏக்டேயரிலும் தென்னை 7898 ஏக்டேயரிலும், இறப்பர் 323 ஏக்டேயரிலும் மொத்தமாக மேற்கொள்ளப் படுகின்றதுடன் சிறு அளவில் ஏற்றுமதி உற்பத்திப் பொருட்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன.இதற்கு மேலதிகமாக கால்நடை வளர்ப்பும் இடம்பெறுகின்றது.

மஹர பிரதேச சபையின் ஆளுகைப் பிரதேசமானது 92 கிராம சேவகர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளதுடன் மாகாண சபை எல்லைகளாக பார்த்தாலும் இந்த பிரதேசமானது மஹர பிரதேச சபையின் ஆளுகைப் பிரதேசத்திற்கு உரித்தானதாக உள்ளன. வாக்கெடுப்பு பிரிவும் மஹர வாக்கெடுப்பு பிரிவாகவே உள்ளது.

இதற்கு மேலதிகமாக இந்தப் பிரதேசமானது வரலாற்று முக்கியத்தும் பெற்றதாகவும் உள்ளது. வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த சில பிரதேசங்களாவன வலகம்பா, ரஜமஹ விஹார, பிலிகுத்துவ ரஜமஹ விஹார, மாளிகாதென்ன இளைப்பாறும் பகுதி, வேபட பாஞ்சாலை, வரபாலன தெம்பிட சிலை ஆகியன காணப்படுகின்றன. 30இ000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்;ந்த மனித நாகரீகத்தின் எச்சங்கள் ரஜ மகா விஹாரையை சூழவும் காணப்படுகின்றன. அத்தகைய மனித நாகரீகத்தின் எச்சங்களில் பிராமிய எழுத்திலான கல்வெட்டுக்களும் கிடைத்துள்ளன. தனுகந்த ஒரு பிரபலமான தியான மையமாகும். இசிகலிகன்த இயற்கை எழில் கொஞ்சும் மலை உச்சியி;ல அமைந்துள்ளது. இதில் கோகாஸ்ரமும் உள்ளடங்குகின்றது.


මහජන නියෝජිතයින් ලේකම්වරුන්